Tuesday, 12 March 2019

அம்மா kavithaigal

தொப்புள்கொடி  என்னும் ரிப்பன் வெட்டி முதன்முதலில் நம்மை பிரசவித்தாள் !!!

வெயில் படாமல், தூசு படாமல்  அழகாய் வைத்து பாதுகாத்தாள் !!!

அம்மா என்று அழைத்ததற்கே  இந்த உலகை வென்ற மகிழ்ச்சி கொண்டாள் !!!

ஆ வென்று  கத்தியதற்கே துடி துடித்துப்
பதறி போனாள் !!!

அவள் இலட்சியங்கள்  என்னவென்று  தெரியவில்லை !!!

நமது  இலட்சியத்தைக்  கற்று தர  அவள் மறந்ததில்லை !!!

மறுஜென்மத்தில்  எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை !! இருந்தபோதும் ,

அவள் என் மகளாகப் பிறக்க  நான் வேண்டாத கடவுள் இல்லை !!!

No comments:

Post a Comment